காசா ஆஸ்பத்திரி மீது தாக்குதல் - மெகபூபா முப்தி கண்டனம்


காசா ஆஸ்பத்திரி மீது தாக்குதல் - மெகபூபா முப்தி கண்டனம்
x

காசா ஆஸ்பத்திரி மீதான தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் 12-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் காசாவில் உள்ள அல்-அக்லி அரபு ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவீச்சில் 500 பேர் உயிரிழந்தனர்.

காசா ஆஸ்பத்திரி மீதான தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மெகபூபா தனது சமூக வலைதளமான எக்சில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவும் பிற நாடுகளும் வெறும் பார்வையாளர்களாக இருக்க வேண்டாம். இந்த தாக்குதல் தொடர்ந்தால், உலக அமைதி பாதிக்கப்படும், ஏனென்றால் நீங்கள் மக்களை வேதனையில் தள்ளுகிறீர்கள். இது பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய நேரம் என கூறி உள்ளார்.


Next Story