ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு


ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு
x

நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

உலகிலேயே முதல் முறையாக நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சாதனை படைத்தது. கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு அரங்கேறியது.

இதைத்தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக பெங்களூரு சென்ற பிரதமர் மோடி, சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி மத்திய அரசு நேற்று இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய விண்வெளித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய வரலாற்று தருணத்தை நினைவுகூரும் வகையில் இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 23-ந் தேதியை 'தேசிய விண்வெளி தினமாக' அறிவித்துள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த முடிவு, வருகிற ஆண்டுகளில் மனித குலத்துக்குப் பயனளிக்கும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story