மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா பாதிப்பு


மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா பாதிப்பு
x

கோப்புப்படம்

மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

போபால்,

மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக போபாலில் நடந்த பாஜக முக்கிய நிர்வாகிகள் குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஜோதிராதித்ய சிந்தியா, காய்ச்சல் காரணமாக பாதியிலேயே அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்து வந்த அனைவரும் அருகிலுள்ள சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று அதில் ஜோதிராதித்ய சிந்தியா பதிவிட்டுள்ளார்.


Next Story