ராஜஸ்தானில் துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை..!
துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரின் ஷியாம்நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இங்கு நேற்று வந்த 2 முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.10 லட்சத்தை பறித்தனர்.
வங்கிக்கு நடந்து வந்த அவர்கள், கொள்ளையடித்தபின் வங்கி ஊழியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். கொள்ளையர்களை கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அடையாளம் காண முயன்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதியில் வங்கி கொள்ளை சம்வபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story