போலீசார் நடத்திய சோதனை தடுப்பு நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


போலீசார் நடத்திய சோதனை தடுப்பு நடவடிக்கை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனை தடுப்பு நடவடிக்கை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) மற்றும் எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கர்நாடக போலீசார் நேற்று அந்த அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பி.எப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. அமைப்புகளின் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது தடுப்பு நடவடிக்கையாக ஆகும். பிற மாநிலங்களிலும் இத்தகைய சோதனைகள் நடந்துள்ளன. எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பது எனக்கு தெரியாது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story