சான்ட்ரோ ரவி மீதான புகார் குறித்து பாரபட்சமற்ற விசாரணை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


சான்ட்ரோ ரவி மீதான புகார் குறித்து பாரபட்சமற்ற விசாரணை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x

சான்ட்ரோ ரவி மீதான புகார் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

மைசூரு

சான்ட்ரோ ரவி மீதான புகார் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

ஊழல் வங்கி

மைசூரு லலிதா மகால் ஓட்டலில் பா.ஜனதா எஸ்.சி. பிரிவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு விமானத்தில் வந்தார். மைசூரு விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா அரசு, விதான சவுதாவை வணிக வளாகமாக மாற்றி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் விதான சவுதா ஊழல் வங்கியாக இருந்தது. விதான சவுதாவில் அப்போது மந்திரியாக இருந்த புட்டரங்கஷெட்டியின் அலுவலகத்தில் ரூ.22 லட்சம் கிடைத்தது. இந்த விவகாரத்தை காங்கிரசார் மூடி மறைத்தனர். புட்டரங்கஷெட்டி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாரபட்சமற்ற விசாரணை

:சான்ட்ரோ ரவி 20 ஆண்டுகளாக அனைத்து அரசியல்வாதிகளுடன் தொடர்பில் உள்ளார். அவர் மீதான புகார்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும். காங்கிரசார் ெவளியிட்டுள்ள ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் மூலம் விசாரணை நடத்துவோம். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன்.

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் யாருடன் வேண்டுமானாலும் இருப்பது போன்று படத்தை மார்ப்பிங் செய்யலாம். சான்ட்ரோ ரவியுடன் நாங்கள் இருக்கும் படமும் அதே போன்றது தான். எங்களுடன் இருக்கும் படத்தை ெவளியிட்டால் அவருடன் எங்களுக்கு தொடர்பு உள்ளது என்று அர்த்தமா?.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story