திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் குளிக்க ஒரு மாதம் தடை
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி கோவில் தெப்பக்குளம் புனரமைக்கப்பட உள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற இருக்கிறது. செப்டம்பர் மாதம் 18-ந்தேதியிலிருந்து 26-ந்தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந்தேதியிலிருந்து 23-ந்தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளம் புனரமைக்கப்பட உள்ளது. தெப்பக்குளத்தில் தண்ணீர் அகற்றப்பட்டு கீழ் பகுதி சுத்தம் செய்யப்பட்டு குழாய்களில் இருக்கும் சிறு பழுதுகள் நீக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் குளிக்க இன்று முதல் வரும் 31-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story