நாட்டின் முக்கிய சாலைகளில் பெங்களூரு எம்.ஜி. ரோடு முதலிடம் பிடித்தது


நாட்டின் முக்கிய சாலைகளில் பெங்களூரு எம்.ஜி. ரோடு முதலிடம் பிடித்தது
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் முக்கிய சாலைகளில் பெங்களூரு எம்.ஜி. ரோடுவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சர்ச் தெரு, பிரிகேட் ரோடு, கமர்சியல் தெருவுக்கும் இடம் பிடித்துள்ளது.

பெங்களூரு:

நாட்டின் முக்கிய சாலைகளில் பெங்களூரு எம்.ஜி. ரோடுவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. சர்ச் தெரு, பிரிகேட் ரோடு, கமர்சியல் தெருவுக்கும் இடம் பிடித்துள்ளது.

எம்.ஜி. ரோடு முதலிடம்

நாட்டில் உள்ள 8 முக்கிய நகரங்களில் இருக்கும் 30 சாலைகளில், எது சிறப்பானது என்பது குறித்து ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த 30 சாலைகளிலும் உள்ள கடைகள், வாகன நிறுத்தும் வசதி, வியாபாரம், பொது போக்குவரத்து வசதி உள்ளிட்ட 5 முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருந்தது.

தற்போது இந்த ஆய்வு முடிவின் அறிக்கையை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, 8 நகரங்களில் உள்ள 30 சாலைகளில், பெங்களூரு எம்.ஜி. ரோட்டுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. எம்.ஜி. ரோட்டில் மக்களுக்கான வசதிகள் கிடைப்பதுடன், வியாபாரமும் சராசரியாக நடந்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும் 3 சாலைகளுக்கு இடம்

அத்துடன் முதல் 10 இடங்களில் பெங்களூருவில் உள்ள மேலும் 3 சாலைகளுக்கும் இடம் கிடைத்திருக்கிறது. அதன்படி, கமர்சியல் தெரு சாலைக்கு 7-வது இடமும், பிரிகேட் ரோடுவுக்கு 9-வது இடமும், சர்ச் தெரு சாலைக்கு 10-வது இடமும் கிடைத்திருக்கிறது. பெங்களூருவில் உள்ள எம்.ஜி. ரோடு உள்பட 4 சாலைகளுக்கும் சென்றால், ஷாப்பிங் சென்றதற்கான உண்மையான உணர்வை தருவதாக மக்கள் கருத்த தெரிவித்திருந்ததால், முதல் 10 இடங்களுக்குள் பிடித்துள்ளது.

சென்னையில் உள்ள அண்ணாநகர் சாலைக்கு 6-வது இடம் கிடைத்திருக்கிறது. டெல்லியில் உள்ள கான் மார்க்கெட் 27-வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. 8 முக்கிய நகரங்களில் உள்ள முக்கிய சாலைகளில் எம்.ஜி. ரோடுவுக்கு முதல் இடம் கிடைத்திருப்பதற்கு பெங்களூரு நகரவாசிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டை எம்.ஜி.ரோட்டில் லட்சக்கணக்கானோர் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.


Next Story