பெங்களூரு: டி.கே சிவகுமாருக்கு சொந்தமான பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவகுமாருக்கு சொந்தமான பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவகுமாருக்கு பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் நேஷனல் ஹில் வியூ என்ற பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டி.கே சிவகுமாருக்கு சொந்தமான பள்ளிக்கு நேற்று மாலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து உடனடியாக போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக பள்ளியில் இருந்து 1,500 மாணவர்களை வெளியேற்றி வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு, மோப்ப நாய் உதவியுடன் பள்ளி வளாகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story