பெங்களூரு-தூத்துக்குடி விமானம் 3 மணி நேரம் தாமதம்
பெங்களூரு-தூத்துக்குடி விமானம் 3 மணி நேரம் தாமதமாக சென்றுள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணி அளவில் இண்டிகோ நிறுவன விமானம் பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு தூத்துக்குடிக்கு புறப்பட இருந்தது. இதற்காக பயணிகளும் காத்திருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடிக்கு புறப்பட இருந்த விமானம் கால தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். சுமார் 3 மணி நேர தாமதத்திற்கு பிறகு அந்த விமானம் மதியம் 4 மணி அளவில் பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டது. இதற்கிடையே காத்திருந்த பயணிகள் டுவிட்டர் மூலம் விமானப்போக்குவரத்து துறை மந்திரிக்கு புகார் அனுப்பினர். மேலும் சிலர் தங்களை பிச்சைக்காரர்கள் போல் விமான நிறுவன ஊழியர்கள் நடத்தியதாக கூறினர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.