பீகார் முதல்-மந்திரிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: முன்னாள் முதல்-மந்திரி


பீகார் முதல்-மந்திரிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்:  முன்னாள் முதல்-மந்திரி
x

பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமாருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன் ராம் மன்ஜி இன்று கூறியுள்ளார்.



பாட்னா,


பீகாரில் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில், பட்ஜெட் பற்றிய விவாதம் நடந்து முடிந்ததும், பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன் ராம் மன்ஜி எழுந்து பேசினார்.

அவர் கூறும்போது, பீகாரில் ஆட்சி செய்த முதல், முதல்-மந்திரி ஸ்ரீகிருஷ்ண சிங்கிற்கு அடுத்து அதிகம் உழைக்க கூடிய முதல்-மந்திரியாக நிதீஷ் குமார் இருக்கிறார். அனைத்து தரப்பு மக்களுக்காகவும் அவர் பணியாற்றி உள்ளார்.

பீகாரானது ஜீவிகா, ஜல ஜீவன் ஹரியாலி செவன் நிஸ்சய் யோஜனா மற்றும் பிற திட்டங்களால் வளர்ச்சி பெற்று உள்ளது. பீகாரில் அளவிட முடியாத வளர்ச்சி பணிகளை நிதீஷ் குமார் செய்து உள்ளார் என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

அவரது காலம் பொற்காலம் ஆக அறியப்படும். பிற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை போன்று, நிதீஷ் குமாருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று நாங்களும் வலியுறுத்துகிறோம் என்று அவர் பேசியுள்ளார்.

இந்த கோரிக்கை வைக்கப்படுவது இது முதன்முறையல்ல. மந்திரி சஞ்சய் ஜா, ஐக்கிய ஜனதா தள எம்.எல்.சி. காலித் அன்வர் உள்ளிட்டோரும் இதற்கு முன்பு நோபல் பரிசு கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.


Next Story