கையில் வாளுடன் வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியர்களை மிரட்டிய நபர்... மகளுக்கு சீருடை வழங்காததால் ஆத்திரம்!


கையில் வாளுடன் வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியர்களை மிரட்டிய நபர்... மகளுக்கு சீருடை வழங்காததால் ஆத்திரம்!
x

பீகாரில் ஒரு நபர் கையில் வாளுடன் வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியர்களை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்னா,

பீகாரில் உள்ள ஒரு பள்ளியில், ஒரு நபர் கையில் வாளுடன் வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகளுக்கு சீருடை வழங்கப்படாததை அடுத்து, அந்த நபர் வாளுடன் வகுப்பறைக்குள் நுழைந்து மிரட்டியுள்ளார்.

அங்கு சென்ற அவர், இதுவரை தனது குழந்தைகளுக்கு புத்தகம் மற்றும் சீருடை வாங்குவதற்கான பணம், ஏன் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று கேட்டு மிரட்டல் விடுத்தார்.

அங்குள்ள கேமராவில் அந்த நபர், வெறும் மார்போடு, கையில் வாளைப் பிடித்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் பயமுறுத்துவது பதிவாகியுள்ளது.

புத்தகம், சீருடைக்கு பணம் கிடைக்காததால் மனமுடைந்த அவர், பள்ளிக்கு சென்று, புத்தகம் மற்றும் சீருடைக்கு பணம் கிடைக்காததற்கான காரணத்தை கேட்டு, ஆசிரியர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், 24 மணி நேரத்திற்குள் பணம் தராவிட்டால், மீண்டும் வருவேன் என, ஆசிரியர்களை மிரட்டினார்.

பீகாரில் உள்ள அராரியாவில் பகவான்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜோகிஹாட் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் ஜஹாங்கீர் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து அந்த நபர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் அக்பர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பள்ளியில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், வாள் பிடித்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story