தேர்தல் வரும்போதெல்லாம் பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுக்கிறது - ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு


தேர்தல் வரும்போதெல்லாம் பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுக்கிறது - ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு
x

தேர்தல் வரும்போதெல்லாம் பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.

போபால்,

மத்திய பிரதேசத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என பாஜக அரசு அறிவித்துள்ளது. குஜராத், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தேர்தல் வரும்போதெல்லாம் பொது சிவில் சட்டத்தை பாஜக கையில் எடுக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள அகர்மால்வா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வரும்போதெல்லாம் பாஜக பொது சிவில் சட்டப் பிரச்சினையை எழுப்புகிறது. இந்த முறை குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தேர்தல்கள் நடந்து வருகின்றன.

நீதிபதி பி.எஸ்.சவுகான் கமிஷன், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டில் வெளியிட்ட 185 பக்க அறிக்கையில், பொது சிவில் சட்டம் அவசியமானது அல்ல என்று கூறியதை நான் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டு உள்ளேன். ஆனால் எப்போது தேர்தல் வந்தாலும் பாஜக அதை எழுப்புகிறது.

இந்திய ஒற்றுமை நடைபயணம் ஒரு இயக்கமாகும் , அது ஒரு நிகழ்வு அல்ல. ஒரு நிகழ்வு என்பது நீண்ட காலத்திற்கு நீடிக்காது. இந்திய ஒற்றுமை நடைபயணம் 140 நாட்கள் நீடிக்கும், எந்த நிகழ்வும் இவ்வளவு காலம் நீடிக்காது.

நிகழ்வுகளை நிர்வாகம் செய்வதில் பாஜக தலைசிறந்து விளங்குகிறது. பிரதமர் மோடி உலகின் தலைசிறந்த நிகழ்வு மேலாளர் என்று பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி ஒருமுறை கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story