ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை


ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா ஆலோசனை
x

ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஜே.பி. நட்டா ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை சந்திக்க வியூகம் வகுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

பா.ஜனதா இலக்கு

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது தடவையாக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. அதுபோல், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அவற்றிலும் வெற்றி பெற பா.ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது. அதையொட்டி, தெலுங்கானா மாநிலத்துக்கு புதிய பா.ஜனதா தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். 5 மாநிலங்களிலும் பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

நட்டா ஆலோசனை

இந்நிலையில், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பல்வேறு மாநிலங்களின் பா.ஜனதா நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். காஷ்மீர், லடாக், இமாசலபிரதேசம், பஞ்சாப், சண்டிகார், ராஜஸ்தான், குஜராத், டாமன் டையு, தாத்ரா நகர் ஹவேலி, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, அரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள், ஆலோசனையில் பங்கேற்றனர்.

தென்மாநில நிர்வாகிகள்

கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மக்களின் கருத்துகளை கேட்பது, தேர்தலுக்கான வியூகம் வகுப்பது ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

'சேவை, நல்ல நிர்வாகம், ஏழைகள் நலன்' ஆகிய 3 அம்சங்களும், கூட்டத்தின் மையப்பொருளாக இருந்ததாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபோல், மராட்டியம் மற்றும் தென்மாநிலங்களின் பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்தில் நட்டா ஆலோசனை நடத்துகிறார்.


Next Story