கோலார் தங்கவயலில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சி உறுப்பினர்கள் காங்கிரசில் இணைய முடிவு


கோலார் தங்கவயலில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சி உறுப்பினர்கள் காங்கிரசில் இணைய முடிவு
x

கோலார் தங்கவயலில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் காங்கிரசில் இணைய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கோலார் தங்கவயல்:-

ஜனதா தளம் (எஸ்) கோட்டை

கோலார் தங்கவயல் ஒரு காலத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் கோட்டையாக இருந்தது. இதற்கு மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. மு.பக்தவச்சலம் ஒரு காரணம். அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்தபோது, ஜனதா தளம் (எஸ்) கட்சி வலிமை வாய்ந்து காணப்பட்டது. பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்தது. அவர் மறைவிற்கு பின்னர் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்தது. தற்போது ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் கோபால், சவுந்தர்ராஜன் ஆகியோர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் செல்வாக்கு உயரவில்லை. இவர்களை தொடர்ந்து கோலார் தங்கவயலில் பா.ஜனதா தலை தூக்கியது. ஆனால் அவர்களால் மக்கள் வளர்ச்சி திட்டப்பணிகளை சரியாக மேற்கொள்ள முடியாமல் போனது. இதனால் கோலார் தங்கவயலில் மீண்டும் காங்கிரஸ் தலை தூக்க தொடங்கியது.

ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ.

இதற்கு காரணம் கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதரின் அணுகுமுறை என்று கூறப்படுகிறது. மக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டு அதை சரி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பா.ஜனதா ஆட்சி காலத்திலும், இவர் பல வளர்ச்சி திட்டப்பணிகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து ரூபாகலா சசிதரை மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்துள்ளனர். இந்தநிலையில் நாடாளுமன்ற

தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கோலார் எம்.பி. தொகுதியை கைப்பற்றவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் காங்கிரசின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயரும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் அரசியல் மாற்றங்களை அறிந்து, தங்கள் கட்சியில் இருந்து காங்கிரசில் சேர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரசில் இணைய முடிவு

இந்தநிலையில் கோபால் தலைமையில்ான ஜனதா தளம் (எஸ்) கட்சி உறுப்பினர்கள் மற்றும் பா.ஜனதா கட்சி உறுப்பினர்கள் காங்கிரசில் இணைய முடிவு செய்துள்ளனர். இதற்காக கோலார் தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதரை சந்தித்த அவர்கள், காங்கிரசில் சேர விரும்புவதாக கூறினார். அதை கேட்ட அவர், காங்கிரசில் சேருவதை வரவேற்கிறேன். அதற்காக ஒரு நாள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாளில் அனைவரும் காங்கிரசில் சேர்ந்து கொள்ளும்படி கூறினார். இந்த கட்சிதாவலால் கோலார் தங்கவயல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story