மேற்கு வங்கத்தில் பாலியல் தொழில் நடத்தி வந்த பா.ஜ.க. நிர்வாகி கைது


மேற்கு வங்கத்தில் பாலியல் தொழில் நடத்தி வந்த பா.ஜ.க. நிர்வாகி கைது
x
தினத்தந்தி 23 Feb 2024 1:36 PM GMT (Updated: 23 Feb 2024 1:38 PM GMT)

ஹவுராவைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி சப்யாசி கோஷ் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் குறிப்பிட்ட ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உள்ளூர் பா.ஜ.க. நிர்வாகி சப்யாசி கோஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மைனர் சிறுமிகள் மற்றும் பெண்களை போலீசார் மீட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி சப்யாசி கோஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஹவுராவில் உள்ள ஓட்டலில் மைனர் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பா.ஜ.க. நிர்வாகி சப்யாசி கோஷ் பிடிபட்டார். இந்த வழக்கில் 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பா.ஜ.க. என்பது இதுதான். பெண் பிள்ளைகளை அவர்கள் பாதுகாப்பதில்லை. பாலியல் தொழில் செய்பவர்களை பாதுகாக்கிறார்கள்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

அதே சமயம் சந்தேஷ்காளி வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. மேலும் தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும், பா.ஜ.க. அவர்களை பாதுகாக்காது என்றும் அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.




Next Story