எங்கள் அரசு மீது பா.ஜனதா பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறது-மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி
தேர்தல் தோல்வியால் ஏமாற்றத்தில் உள்ள பா.ஜனதா, எங்கள் அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறது என்று மந்திரி பிரியங்க் கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு:-
பேட்டி
கர்நாடக கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முந்தைய பா.ஜனதா
ஆட்சியின்போது காண்டிராக்டர்கள் சங்கத்தினர் தான் 40 சதவீது கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். அந்த குற்றச்சாட்டை நாங்கள் முன்வைக்கவில்லை. திட்ட பணிகளை ஆய்வு செய்த பிறகு நிலுவைத்தொகையை காண்டிராக்டர்களுக்கு வழங்கப்படும். இதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். பணிகளை செய்திருந்தால் அத்தகையவர்களுக்கு பணம் கிடைக்கும்.
காங்கிரசை குறை சொல்வதை...
இதில் பா.ஜனதாவினர் ஆர்வம் காட்டுவது ஏன்?. சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக பா.ஜனதா மிகுந்த ஏமாற்றத்தில் எங்கள் அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறது. பா.ஜனதா எங்கு குரல் கொடுக்க வேண்டுமோ அங்கு குரல் கொடுப்பது இல்லை.எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்குமாறு கட்சி மேலிடத்திடம் கர்நாடக பா.ஜனதாவினர் குரல் எழுப்பினால் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும்.இனியாவது காங்கிரஸ் அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.நாங்கள் ஆட்சிக்கு வந்து 2 மாதத்தில் 4 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.