கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பாஜக எம்எல்ஏ ஆர்.அசோகா தேர்வு


கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பாஜக எம்எல்ஏ ஆர்.அசோகா தேர்வு
x

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியானது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. அதாவது 223 தொகுதிகளில் போட்டியிட்டு 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த பாஜகவில் எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பாஜக எம்எல்ஏ ஆர்.அசோகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியான நிலையில், 6 மாதங்கள் கழித்து எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.


Next Story