மத்திய பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை பெறும் - ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு


மத்திய பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை பெறும் - ரிபப்ளிக் கருத்துக்கணிப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 30 Nov 2023 6:10 PM IST (Updated: 30 Nov 2023 8:07 PM IST)
t-max-icont-min-icon

5 மாநில சட்டசபைத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.

போபால்,

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

ரிபப்ளிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 118-130 இடங்களை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 97-107 இடங்களை பிடிக்கும் என்றும் பிற கட்சிகள் 0-2 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன் கீ பாத் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு விவரம் வருமாறு:-

காங்கிரஸ் 102-125 இடங்கள்

பாஜக 100-123 இடங்கள்

சிஎன்என் நியூஸ்18 செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு விவரம் வருமாறு:-

பாஜக 116 இடங்கள்

காங்கிரஸ் 111 இடங்கள்

மற்றவை 3 இடங்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்த இடங்கள் 199 ஆகும். இதில், பெரும்பான்மையாக பிடிக்க வேண்டிய இடங்கள் 101. ராஜஸ்தானில் பாஜக கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம்: மொத்தம் - 199 இடங்கள்

ஜன் கீ பாத் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு விவரம் வருமாறு:-

பாஜக 100-122 இடங்கள்

காங்கிரஸ் 62-85 இடங்கள்

மற்றவை 14-15 இடங்கள்

டிவி9 செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு விவரம் வருமாறு:-

காங்கிரஸ் 100-110 இடங்கள்

பாஜக 90-100 இடங்கள்

மற்றவை 5-15 இடங்கள்

சிஎன்என் நியூஸ்18 செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு விவரம் வருமாறு:-

பாஜக 115 இடங்கள்

காங்கிரஸ் 71 இடங்கள்

மற்றவை 13 இடங்கள்


Next Story