ராம் ராம் என கூற வளர்ப்பு நாய்க்கு பயிற்சி அளித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.: வைரலான வீடியோ


ராம் ராம் என கூற வளர்ப்பு நாய்க்கு பயிற்சி அளித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.:  வைரலான வீடியோ
x
தினத்தந்தி 2 Feb 2023 7:08 AM GMT (Updated: 2 Feb 2023 8:36 AM GMT)

பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது வளர்ப்பு நாயை ராம் ராம் என கூற செய்து பயிற்சி அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.லக்னோ,


அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்த நிலையில், கட்டுமான பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

இதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து விட்டன. வருகிற டிசம்பர் மாதத்துக்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகி விடும். 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி மகர சங்கராந்தி நாளில், கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும். அதனை தொடர்ந்து அதே மாதத்தில், ராமர் கோவில் பக்தர்களுக்கு திறந்து விடப்படும்.

கடந்த ஜனவரி 2-ம் வாரத்துடன், அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளது என ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் கட்டுமான பணி திட்ட மேலாளர் ஜெகதீஷ் அப்லே கூறும்போது, தினமும் சூரிய ஒளி ராமர் சிலையின் நெற்றியில் திலகம் இடுவது போல பிரதிஷ்டை செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்து உள்ளார்.

ராமர் கோவிலில் ராமர் மற்றும் ஜானகி தேவி சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்காக நேபாளத்தில் இருந்து மிக பெரிய சாலிகிராம கற்களை கொண்டு வந்து உள்ளனர்.

6 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்பு மிக்க இந்த கற்கள் நேபாளத்தில் உள்ள காளி கந்தகி ஆற்றங்கரையிலேயே உள்ளன என கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகருக்கு வந்த இந்த கற்களை முதல்-மந்திரி ஆதித்யநாத் வரவேற்று, வழிபடுகிறார். பொதுமக்களும் இவற்றை பார்த்து ஆச்சரியம் அடைந்து உள்ளனர்.

இந்த சூழலில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் தனது வளர்ப்பு நாயை ராம் ராம் என கூற செய்து பயிற்சி அளித்த வீடியோ வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சேவதா தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. கியான் திவாரி.

இவர் செல்ல பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு பிஸ்கட் கொடுப்பதற்கு முன்பு, அதனை ராம் ராம் என கூறும்படி கேட்கிறார். நாய் சற்று நேரம் குறைப்பதும், முனங்குவதும் என இருக்கிறது. தொடர்ந்து சில முறை அவர் முயற்சி செய்து விட்டு, அதற்கு சாப்பிட கொடுக்கிறார்.

இந்த வீடியோவை அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதனை பலரும் தங்களது வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். பலரும் ஜெய் ஸ்ரீராம் என விமர்சனங்களை வெளியிட்டும் வருகின்றனர்.Next Story