கோவாவில் 3 மாவட்ட பஞ்சாயத்து இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி
கோவாவில் 3 மாவட்ட பஞ்சாயத்து இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்றுள்ளது.
பனாஜி,
கோவா மாநிலத்தில் டாவோர்லிம், ரீஸ்-மாகோஸ், கொர்டாலிம் ஆகிய 3 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் உறுப்பினர்களாக இருந்தவர்கள், கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக, தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதனால் காலியான அந்த 3 இடங்களுக்கும் கடந்த 16-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது.
நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதில், 3 இடங்களிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது. டாவோர்லிமில் பரேஷ் நாயக்கும், ரீஸ்-மாகோசில் சந்தீப் காசிநாத் பந்தோட்கரும், கொர்டாலிமில் பா.ஜனதா ஆதரவு சுயேட்ச்சை வேட்பாளர் மெர்சியானா மெண்டிஸ் இ வாசும் வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றிக்காக கோவா மக்களுக்கு பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா நன்றி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story