பிரதமருக்கு கிடைத்த பாராட்டுகளை "ஜீரணிக்க முடியவில்லை" ராகுல் காந்தி மீது பா.ஜ.க தாக்கு


பிரதமருக்கு கிடைத்த பாராட்டுகளை ஜீரணிக்க முடியவில்லை ராகுல் காந்தி மீது பா.ஜ.க தாக்கு
x

பிரதமருக்கு கிடைத்த பாராட்டுகளை காங்கிரசால் "ஜீரணிக்க முடியவில்லை" என ராகுல் காந்தி மீது மத்திய மந்திரி அனுராக் தக்கூர் கூறி உள்ளார்.

புதுடெல்லி

6 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்று உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலிபோர்னியாவில் அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கடவுளை விட அதிகமாகத் தெரியும் என்று நினைக்கும் மக்கள் இருக்கிறார்கள் பிரதமர் மோடி அப்படிப்பட்டவர்களில் ஒருவர்.

இந்திய பிரதமர் மோடிஜிக்கு அருகில் கடவுள் உட்கார்ந்தால், பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என கடவுளுக்கே அவர் பாடம் எடுப்பார். நான் சொல்வது சரிதானே? தாம் படைத்தது என்ன என்பதே கடவுளுக்கே குழப்பமாகிவிடும்.

இந்தியாவில் சிலர் விஞ்ஞானிகளுக்கு அறிவியலை போதிப்பர்; ஆய்வாளர்களுக்கு வரலாற்றை சொல்லித் தருவார்கள். ராணுவ வீரர்களுக்கே ராணுவத்தைப் பற்றி சொல்லித் தருவார்கள். உண்மையில் அவர்களால் எதனையுமே புரிந்து கொள்ள முடியாது. எதனையுமே புரிந்து கொள்ளவே முடியாத அவர்களுக்கு எதனையுமே காது கொடுத்து கேட்கும் சகிப்புத் தன்மையும் இருக்காது.

வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்தியாவின் மோடி அரசு மறுக்கிறது.

செங்கோல் மனோபாவம் கொண்டவர்களிடம் நாம் வேறு எதனையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?

பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பேசுகிறோம். காங்கிரஸ் கட்சி பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறது.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வருவோம். சில கூட்டணி கட்சிகள் எதிர்த்தாலும் கூட பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் அரசு கொண்டு வரும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

ராகுல்காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டன்ம் தெரிவித்து உள்ளது. மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் தனது சமீபத்திய வெளிநாட்டு பயணங்களின் போது பிரதமருக்கு கிடைத்த பாராட்டுகளை கண்டு "ஜீரணிக்க முடியவில்லை".

ராகுல்காந்தி தனது ஒரு வார கால அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது இந்திய அமெரிக்கர்களுடனும், வால் ஸ்ட்ரீட் நிர்வாகிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடனும் உரையாடுவார். ஜூன் 4 ஆம் தேதி நியூயார்க்கில் ஒரு பொதுக் கூட்டத்துடன் அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறார்.


Next Story