சுதந்திர தினத்தை முன்னிட்டு காஷ்மீரில் பிரம்மாண்ட படகு பேரணி
வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றுவதை முன்னிறுத்தும் வகையில் இந்த படகு பேரணி நடத்தப்பட்டது.
ஸ்ரீநகர்,
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் இல்லங்கள் தோறும் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால், மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட படகு பேரணி நடைபெற்றது. வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்றுவதை முன்னிறுத்தும் வகையில் இந்த படகு பேரணி நடத்தப்பட்டது.
மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஏற்பாடு செய்த இந்த பேரணியை காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியைசைத்து தொடங்கி வைத்தார். தேசிய கொடியை ஏற்றியபடி ஏரியில் அணிவகுத்த படகுகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.