ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீசப்பட்ட சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்


ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீசப்பட்ட சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
x

கோப்புப்படம் 

புமியோ கிஷிடா நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜப்பானின் வயகமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது குண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது.

இச்சம்பவத்தில் பிரதமர் புமியோ கிஷிடா பத்திரமாக மீட்கப்பட்டார். பிரதமரை நோக்கி குண்டை வீசியதாக ஒருவரை கைதுசெய்த ஜப்பான் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவீட்டரில் கூறும்போது; ஜப்பானில் உள்ள வயகமாவில் எனது நண்பர் பிரதமர் கிஷிடா பங்கேற்ற நிகழ்ச்சியில் வன்முறை சம்பவம் நடந்ததை அறிந்தேன்.

அவர் பாதுகாப்பாக இருப்பது அறிந்து நிம்மதி அடைந்தேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்தியா கண்டிக்கிறது என தெரிவித்துள்ளார்.


Next Story