டெல்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


டெல்லியில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 1 May 2024 9:38 AM IST (Updated: 1 May 2024 12:04 PM IST)
t-max-icont-min-icon

வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளிகள் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் துவாரகா, நொய்டா உள்ளிட்ட இடங்களில் உள்ள 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. துவாரகா பப்ளிக் பள்ளி, டெல்லி பப்ளிக் பள்ளி, மதர் மேரிஸ் ஆகிய பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் நொய்டா பப்ளிக் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளிகளுக்கு சமீபத்தில் வந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே இ-மெயில் மூலம் ஒரே விதமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


1 More update

Next Story