மத்திய மந்திரி நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்


மத்திய மந்திரி நிதின் கட்கரியின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
x

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஒரு நபர், மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரின் காம்ரா சவுக் பகுதியில் மத்திய மந்திரி நிதின் கட்காரியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலையில் தொலைபேசி மூலம் மூன்று முறை தொடர்பு கொண்டு பேசிய ஒரு நபர், மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மத்திய மந்திரியின் அலுவலகத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் அந்த நபர் கூறி உள்ளார். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி நிதின் கட்காரியின் அலுவலகத்தில் இருந்து காவல்துறைக்கு புகார் அனுப்பப்பட்டது.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காலை 11.25 மணி, 11.32 மணி மற்றும் 12.30 மணிக்கு என மொத்தம் 3 முறை மிரட்டல் அழைப்புகள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மிரட்டல் விடுத்த நபரின் பேச்சு பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story