கேரளாவில் தந்தை, மகள் இருவரும் ஒரே நாளில் வழக்கறிஞராக பதவியேற்பு...!


கேரளாவில் தந்தை, மகள் இருவரும் ஒரே நாளில் வழக்கறிஞராக பதவியேற்பு...!
x
தினத்தந்தி 21 Sept 2022 10:53 AM IST (Updated: 21 Sept 2022 11:15 AM IST)
t-max-icont-min-icon

தந்தை, மகள் இருவரும் ஒரே நாளில் வழக்கறிஞராக பதவியேற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் கேரளா உயர்நீதிமன்றத்தில் அரங்கேறியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் கொச்சி கக்கநாட்டை சேர்ந்தவர் சுரேந்திரன். இவருக்கு சிறு வயது முதலே வழக்கறிஞராக ஆக வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. ஆனால் குடும்ப சூழல் காரணமாக அவரது கனவு நிறைவேறவில்லை என தெரிகிறது.

ஆசிரியராக வாழ்வை தொடங்கிய இவர், கூட்டுறவு வங்கியில் கிளர்க்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். பின்னர் அவர் தனது மகளுடன் சேர்ந்து பி.ஏ.பி.எல் படிப்பு முடித்து இருவரும் பட்டம் பெற்றனர்.

இந்த நிலையில், பட்டம் பெற்ற இருவரும் கொச்சி உயர்நீதிமன்ற பார் கவுன்சலில் பதிவு செய்த நிலையில், தந்தை, மகள் இருவரும் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக நேற்று பதவியேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு தங்களது பணியை துவங்கினர்.

தந்தை, மகள் இருவரும் ஒரே நாளில் வழக்கறிஞராக பதவியேற்றுக்கொண்ட சம்பவம் கேரளா உயர்நீதிமன்றத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story