மராட்டியம்: பேருந்து நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு


மராட்டியம்: பேருந்து நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு
x

மராட்டியத்தில் பேருந்து நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.

பால்கர்,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஜவ்ஹர் பேருந்து நிலையத்தில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் மற்றொரு சிறுவன் காயமடைந்தான். நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்து ஒன்று பின்புறமாக வந்து கொண்டிருந்த போது சுற்றுச்சுவரில் மோதியது. இதையடுத்து சுவரின் ஒரு பகுதி அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது இடிந்து விழுந்தது. இதில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் ​​15 வயதுடைய மற்றொரு சிறுவன் பலத்த காயமடைந்தான். சிறுவர்கள் தங்கள் உறவினர்களை சந்திப்பதற்காக குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் இருந்து ஜவ்ஹருக்கு வந்துள்ளனர்.

இதையடுத்து உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story