விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது


விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
x

நிலத்தை அளந்து கொடுக்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிக்கமகளூரு:

நிலத்தை அளந்து கொடுக்க விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா பேகூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என்று தரிகெரே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று நில அளவையர் ரவிக்குமாரை சந்தித்து விண்ணப்பம் செய்தார்.

அப்போது ரவிக்குமார் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வழங்கினால் நிலத்தை அளந்து கொடுப்பதாக நாகராஜிடம் தெரிவித்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜ், இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் கொடுத்தார்.

நில அளவையர் கைது

இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் நாகராஜிக்கு சில அறிவுரைகளை கூறினர். அதன்பின்னர், அவர் தாலுகா அலுவலகத்துக்கு சென்று நில அளவையர் ரவிக்குமாரை சந்தித்து ரசாயனப்பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை ரவிக்குமார் வாங்கினார். அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார், கையும், களவுமாக ரவிக்குமாரை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லஞ்சப்பணம் ரூ.5 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து நில அளவையர் ரவிக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story