குடியரசு தின கொண்டாட்டம்: இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்


குடியரசு தின கொண்டாட்டம்: இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்
x

குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

ஜம்மு,

74-வது குடியரசு தினத்தையொட்டி சர்வதேச எல்லையையொட்டி பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய ராணுவத்தினர் இனிப்பு பரிமாறிக்கொண்டனர்.

ரஜவுரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் பகிர்ந்தனர்.

இதுபோல அக்னூர், சம்பா, கத்துவா, அர்னியா மற்றும் ஆர்.எஸ்.புரம் போன்ற இடங்களிலும் இனிப்புகள் பரிமாறப்பட்டன. பஞ்சாப் மாநில எல்லையான வாகாவிலும் இதுபோல இனிப்பு பரிமாறப்பட்டு நட்புறவு பேணப்பட்டது.


Next Story