பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல்
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமிர்தசரஸ்,
பஞ்சாபின் அமிர்தசரஸ் அருகே தானோ கலன் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லயில் பாதுகாப்புப்படை (பி.எஸ்.எப்) வீரர்கள் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் மர்ம பொட்டலத்தை தூக்கி கொண்டு டிரோன் ஒன்று வானில் பறந்து வந்தது.
அதனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயன்றபோது அங்குள்ள வயல்வெளியில் அந்த பொட்டலத்தை போட்டுவிட்டு அந்த டிரோன் தப்பியது.அந்த பொட்டலத்தை கைப்பற்றி சோதனை செய்தபோது அது 3 கிலோ எடைக்கொண்ட ஹெராயின் வகை போதைப்பொருள் என்பது தெரிந்தது.
சமீபகாலமாக பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் கள்ளத்தனமாக போதைப்பொருட்கள், ஆயுதங்கள் ஆகியவை இந்திய எல்லைகளில் சப்ளை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
Related Tags :
Next Story