மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 போலீசார் காயம்


மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 21 போலீசார் காயம்
x
தினத்தந்தி 20 April 2024 5:31 AM GMT (Updated: 20 April 2024 6:04 AM GMT)

லாரியில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பேருந்தை திருப்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

போபால்,

மத்திய பிரதேசத்தில் நேற்று நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினர், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தல் முடிந்ததும், அவர்கள் மற்ற பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றுகொண்டிருந்தனர். அந்த வகையில், மாநிலத்தின் பெதுல் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை முடிந்து ஊர்க்காவல் படையினர் மற்றும் போலீசார் உள்ளிட்ட 40 பேரை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

போபால்-பெதுல் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி ஒன்று பேருந்தின் குறுக்கே வந்தது. லாரியில் மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பேருந்தை திருப்ப முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story