குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் - மீண்டும் உறுதியளித்த மத்திய மந்திரி


குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் - மீண்டும் உறுதியளித்த மத்திய மந்திரி
x

கோப்புப்படம்

குடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் தேவை. இதற்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் மத்திய அரசுக்கு கவலையில்லை என்று மத்திய மந்திரி தெரிவித்தார்.

கொல்கத்தா,

நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்து இணை மந்திரி சாந்தனு தாகூர் கடந்த 28-ந்தேதி கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என நேற்று மீண்டும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'குடியுரிமை திருத்தச்சட்டம் நாட்டின் தேவை. இதற்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் மத்திய அரசுக்கு கவலையில்லை. இது எங்களது வாக்குறுதியாகும். அதை நிறைவேற்றுவதில் இருந்து நாங்கள் பின்வாங்கமாட்டோம், மத்திய அரசு இதை அமல்படுத்தும்' என தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே எதிர்ப்பதாக கூறிய சாந்தனு தாகூர், அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் நிலைமையை அனுதாபத்துடன் பார்க்காமல் இருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார்.

1 More update

Next Story