புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டம் வகுக்க வேண்டும் - மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்


புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டம் வகுக்க வேண்டும் - மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
x

கோப்புப்படம் 

நாடாளுமன்ற தேர்தல் கால அட்டவணையை அறிவிப்பாணையாக வெளியிடுவதற்கான நடைமுறையை மத்திய மந்திரிசபை மேற்கொண்டது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த முதலாவது மந்திரிசபை கூட்டம் இதுவாகும்.

இ்க்கூட்டத்தில், தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய மந்திரிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு மத்திய மந்திரியும் தங்களது துறை செயலாளர்கள் மற்றும் இதர அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்றும், இந்த செயல்திட்டத்தை எப்படி சிறப்பாக அமல்படுத்துவது என்று அவர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் மோடி அறிவுறுத்தினார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் கால அட்டவணையை அறிவிப்பாணையாக வெளியிடுவதற்கான நடைமுறையையும் மத்திய மந்திரிசபை மேற்கொண்டது. தேர்தல் கமிஷன் பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.


Next Story