திமுக எம்.பி.கனிமொழிக்கு எதிரான வழக்கு - தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு
தி.மு.க எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
புதுடெல்லி,
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க எம்.பி. கனிமொழி, தனது வேட்பு மனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரது வெற்றியை ரத்து செய்யக்கோரி, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த 24ம் தேதி விசாரித்தது. அப்போது, கனிமொழியின் கணவர் வெளிநாட்டில் வசிப்பதால் வேட்புமனுவில் கணவரது வருமானத்தை தெரிவிக்கும் நிரந்தர கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்நிலையில், கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story