அதிமுக விதிகளில் திருத்தம் தொடர்பான வழக்கு; விசாரணை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
அதிமுக விதிகளில் திருத்தம் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக் கோரிய வழக்கை மூன்று வாரங்களுக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளிவைத்துள்ளது.
புதுடெல்லி,
அதிமுக விதிகளில் திருத்தம் தொடர்பாக, இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள மனுவை சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றக் கோரிய வழக்கை மூன்று வாரங்களுக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளிவைத்துள்ளது.
இது தொடர்பான மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கே.சி. பழனிசாமி தரப்பில், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள ரிட் மனு தள்ளுபடி செய்யும் நிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த சுப்ரீம் கோர்ட், கே.சி. பழனிசாமியின் மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.
Related Tags :
Next Story