ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை இழுத்து சென்று கொன்ற முதலை - அதிர்ச்சி வீடியோ
ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்து சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா,
ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டம் பலட்பூர் கிராமத்தை சேர்ந்த ஜோதி (வயது 35) என்ற பெண் இன்று அப்பகுதியில் உள்ள பிருபா ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஆற்றில் பதுங்கி இருந்த முதலை குளித்துக்கொண்டிருந்த ஜோதியை இழுத்துக்கொண்டு சென்றது. பின்னர், ஜோதியை கொன்ற முதலை அவரது உடலை ஆற்றுக்குள் இழுத்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
இதனை தொடர்ந்து முதலை நடமாட்டம் இருப்பதால் ஆற்றில் குளிக்க செல்பவர்கள் கவனமாக இருக்கும்படி மாவட்டம் நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story