சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது - பீகார் முதல் மந்திரி குற்றச்சாட்டு


சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது - பீகார் முதல் மந்திரி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 Aug 2022 5:37 PM IST (Updated: 24 Aug 2022 5:40 PM IST)
t-max-icont-min-icon

பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார்

பாட்னா,

பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியே வந்த நிதிஷ் குமார், பின்னர் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியானார். பீகார் மாநில முதல்-மந்திரியாக 8-வது முறையாக அவர் கடந்த 10-ந்தேதி பதவியேற்று கொண்டார். பீகார் மாநில துணை முதல்-மந்திரியாக ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்று கொண்டார். பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில் தனது அரசுக்கு பெரும்பான்மையை நிதிஷ் குமார் காட்டினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர்

இந்த நிலையில் சட்டசபையில் பேசிய நிதிஷ் குமார் கூறியதாவது ;

பீகாரின் வளர்ச்சிக்காக நாங்கள் (ஆர்ஜேடி மற்றும் ஜேடியு) இணைந்து செயல்பட உறுதிமொழி எடுத்துள்ளோம். நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் என்னை அழைத்து இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்தனர், 2024 தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்

2017ல் பாட்னா பல்கலைகழகத்திற்கு மத்திய அந்தஸ்து கோரியபோது யாரும் அதை கவனிக்கவில்லை. இப்போது நீங்கள் (மத்திய அரசு) உங்கள் வேலையை விளம்பரப்படுத்த அதையே செய்வீர்கள். அவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர். மத்திய அரசின் பணிகளை மட்டுமே அனைவரும் விவாதிக்கிறார்கள்.

நீங்கள் (பாஜக எம்எல்ஏக்கள்) அனைவரும் ஓடிவிடுகிறீர்களா? என்னை எதிர்த்து பேசினால்தான் உங்கள் கட்சியில் பதவி கிடைக்கும். நீங்கள் அனைவரும் உங்கள் மேலதிகாரிகளிடம் இருந்து உத்தரவு பெற்றிருக்க வேண்டும்.என தெரிவித்தார்.

.


Next Story