ஜெய்பூர்: 102 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் - மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி


ஜெய்பூர்: 102 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பறிமுதல் - மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி
x

ஜெய்பூரில் லாரியிலிருந்து 102.910 கிலோ எடையுள்ள 95 அபின் பாக்கெட்டுகளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், ஜெய்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள ராஜதோக் சுங்கச்சாவடியில் லாரியிலிருந்து 102.910 கிலோ எடையுள்ள 95 அபின் பாக்கெட்டுகளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான பாதையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, லாரியை சோதனை செய்தபோது, துவாரங்களில் அபின் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையின் போது, ​​கடத்தல்காரர்கள், அரசு வாகனத்தின் மீது லாரியை மோதிவிட்டு தப்பிக்க முயன்றனர். ஆனால், அதிகாரிகள் அவர்களை மடக்கிப் பிடித்தனர். கடத்தல் போதைப்பொருளுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் என்டிபிஎஸ் சட்டம் 1985-ன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story