வெள்ள பாதிப்புக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை - மம்தா பானர்ஜி


வெள்ள பாதிப்புக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை - மம்தா பானர்ஜி
x

வெள்ள பாதிப்புக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

சிக்கிமில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம், அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால் வெள்ள பாதிப்புகளுக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'சிக்கிமில் நமது சகோதர-சகோதரிகளை சோகத்துக்கு உள்ளாக்கிய பெருவெள்ளம், டார்ஜலிங் மலைகள் மற்றும் கலிம்ேபாங்கில் உள்ள எனது மக்களையும் பாதித்தது. வெள்ளம் ஏற்பட்ட இரவில் இருந்து 24 மணி நேரமும் நானும், எங்கள் ஒட்டுமொத்த நிர்மாகமும் மக்களை பாதுகாக்க உழைத்து வருகிறோம். கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாகத்துக்கு ரூ.25 கோடி வழங்கினோம். சிக்கிம் அரசு, ராணுவ அதிகாரிகளுக்கு அனைத்து வழிகளிலும் உதவினோம்' என கூறியுள்ளார்.

மேலும் அவர், 'ஆனால் வடக்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் பகுதிகளில் பேரழிவின் தீவிரம் மற்றும் ஏராளமான இறப்புகள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மத்திய அரசின் பாகுபாடுகளால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல, நாங்களும் நிச்சயமாக சிக்கிமுக்குத்தான் உதவுகிறோம். ஆனால் பேரிடர் மேலாண்மையில் மத்திய உதவி தொடர்பான விஷயங்களில் சமமான பார்வையுடன், பாகுபாடு காட்டாமல் இருக்க வேண்டும்' என்றும் காட்டமாக குறிப்பிட்டு உள்ளார்.

1 More update

Next Story