விளையாட்டு ஸ்டேடியத்தில் நாயுடன் வாக்கிங்..!! - ஐஏஎஸ் அதிகாரி அதிரடியாக பணியிடமாற்றம்


விளையாட்டு ஸ்டேடியத்தில் நாயுடன் வாக்கிங்..!! - ஐஏஎஸ் அதிகாரி அதிரடியாக பணியிடமாற்றம்
x

விளையாட்டு ஸ்டேடியத்தில் நாயுடன் வாக்கிங் சென்ற சம்பவம் தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

டெல்லியின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) சஞ்சீவ் கிர்வார், இவரது மனைவி அனு துக்கா. தனது நாயை தியாகராஜ் ஸ்டேடியத்தில் நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவா்களது வருகையையொட்டி, விளையாட்டு வீரர்கள் இரவு 7 மணிக்குள் தியாகராஜ் ஸ்டேடியத்தை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ஐஏஎஸ் அதிகாரி தனது நாயை நடைபயிற்சிக்காக அழைத்துச் சென்ற சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தியாகராஜ் ஸ்டேடியத்தை கிர்வார் மற்றும் அவரது மனைவி தவறாக பயன்படுத்தியது தொடர்பாக டெல்லி தலைமை செயலாளரிடம் உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், சஞ்சீவ் கிர்வார் மற்றும் அவரது மனைவி அனு துக்கா ஆகியோரை முறையே லடாக் மற்றும் அருணாசலப்பிரதேசத்திற்கு பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story