சி.இ.டி. பொது நுழைவு தேர்வு விவகாரம்; கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு


சி.இ.டி. பொது நுழைவு தேர்வு விவகாரம்; கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு
x

சி.இ.டி. பொது நுழைவு தேர்வு விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளுக்கான சி.இ.டி. பொது நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தகுதி அடிப்படையில் பி.யூ. படிப்புக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படவில்லை என கூறி தேர்வர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், தங்களை தேர்வில் புறக்கணித்து விட்டதாகவும் கூறிவருகின்றனர். இந்த நிலையில் தேர்வர்கள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் இதுதொடர்பான வழக்குகள் விசாரணையில் இருந்து வந்தன.


அந்த வழக்குகள் ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ண குமார் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், தேர்வர்களின் நிலைப்பாடு மற்றும் 2022-ம் ஆண்டு நடைபெற்று முடிந்த சி.இ.டி. பொது நுழைவுத்தேர்வு தகுதி பட்டியல் குறித்து விளக்கம் அளிக்க கர்நாடக தேர்வு ஆணையம் மற்றும் கர்நாடக அரசுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். விரைவில் கர்நாடக அரசு சார்பில் அதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என தெரிகிறது.


Next Story