ராஜஸ்தானில் கம்பியால் இணைக்கப்பட்ட முதல் தொங்கு பாலம்! கட்டுமானப் பணிகள் நிறைவு - பயன்பாட்டுக்கு தயார்


ராஜஸ்தானில் கம்பியால் இணைக்கப்பட்ட முதல் தொங்கு பாலம்! கட்டுமானப் பணிகள் நிறைவு - பயன்பாட்டுக்கு தயார்
x

ராஜஸ்தானில் கம்பியால் இணைக்கப்பட்ட முதல் பாலமாக இது உள்ளது. அதன் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் சம்பல் ஆற்றின் மீது தொங்கு பாலம் அமைக்கும் பணிகளை பிரதமர் மோடி, 2017ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

சம்பல் ஆற்றின் குறுக்கே கிட்டதட்ட 1.4 கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ.214 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த இந்த தொங்கு பால பணிகள் முடிவடைந்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இயற்கை சீற்றங்களின் போது எந்த வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், ஏரோ-டைனமிக் முறையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.தேசிய நெடுஞ்சாலை-76 கோட்டா புறவழிச் சாலையில் சம்பல் ஆற்றின் குறுக்கே இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கம்பியால் இணைக்கப்பட்ட முதல் பாலமாக இது உள்ளது. அதன் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது.

அதிகப் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் விதமாகவும், கனமழை, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை சமாளிக்கும் விதமாகவும் அதிநவீன கட்டமைப்புகளுடன் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story