சந்திரயான் 3 வெற்றி - டூடுல் வெளியிட்ட கூகுள்


சந்திரயான் 3 வெற்றி - டூடுல் வெளியிட்ட  கூகுள்
x
தினத்தந்தி 24 Aug 2023 10:48 AM GMT (Updated: 24 Aug 2023 12:25 PM GMT)

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

புதுடெல்லி,

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறி தனது ஆய்வை தொடங்கி உள்ளது. ரோவர் 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு நடத்துகிறது.இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையை நாடே கொண்டாடி வருகிறது. இந்த சாதனையில் பங்குபெற்றஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் வந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில் இதனை கொண்டாடும் வகையில், கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டு உள்ளது. சிறப்பு டூடுலில் சந்திரயான் 3 நிலவை சுற்றி வருவதும், தென் துருவத்தில் கால் பதித்ததும், இந்தியா சிரிப்பது போன்ற கார்ட்டூன் வண்ணமயமான நிறங்களில் அழகாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. டூடுலை கிளிக் செய்ததும், சந்திரயான் 3 பற்றிய தகவல்கள் மற்றும் செய்தி குறிப்புகள் அடங்கிய சிறப்பு பக்கம் திறக்கிறது.


Next Story