செஸ் ஒலிம்பியாட்: தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு


செஸ் ஒலிம்பியாட்: தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 10 Aug 2022 8:41 PM IST (Updated: 10 Aug 2022 8:45 PM IST)
t-max-icont-min-icon

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியதற்கு தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்தியுள்ளதாக தமிழக மக்களுக்கும், அரசுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக மக்களும் அரசும் மிகச் சிறப்பாக நடத்தியுள்ளார்கள். உலகெங்கிலும் இருந்து இந்த போட்டியில் பங்கு பெற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும் விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியமைக்கு எனது பாராட்டுக்கள்". இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

முன்னதாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், " சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்த 44வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணியினர் ஊக்கமளிக்கும் வகையில் செயல்பட்டனர். வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி அணி (ஆண்கள்) மற்றும் இந்தியா ஏ அணி (பெண்கள்) ஆகியோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் செஸ் எதிர்காலத்திற்கு இது நல்லது". இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.



Next Story