சத்தீஷ்கார்: நின்றிருந்த லாரி மீது பஸ் மோதல்; 7 பேர் உயிரிழப்பு
சத்தீஷ்காரில் கார் மீது மோதி விடாமல் இருக்க நின்றிருந்த லாரி மீது பஸ் மோதியதில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் இருந்து சுர்குஜா மாவட்டம் நோக்கி தனியார் நிறுவன பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகாலை 4 மணியளவில் கோர்பா மாவட்டத்திற்கு உட்பட்ட மடாய் கட் பகுதியருகே வந்தபோது, நின்றிருந்த லாரி ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ் பயணிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்த நபர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பஸ் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில், எதிர் திசையில் இருந்து வந்த கார் மீது மோதி விடாமல் இருப்பதற்காக அதனை தவிர்க்க முயன்றபோது, லாரி மீது பஸ் மோதி இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story