மிசா சட்டத்தில் கைதானவர்களுக்கு ஓய்வூதியத் தொகை - அரசு அறிவிப்பு


மிசா சட்டத்தில் கைதானவர்களுக்கு ஓய்வூதியத் தொகை - அரசு அறிவிப்பு
x

சத்தீஷ்காரில் முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் 'மிசா' சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வூதியத் தொகை மீண்டும் வழங்கப்படுமென்று அம்மாநில முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.

சத்தீஷ்காரில் 'மிசா' அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த 1975 - 1977 வரையிலான காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்காக ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை ஓய்வூதியத் தொகை வழங்கும் வகையில், கடந்த 2008-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஓய்வூதியத் திட்டம், கடந்த 2019-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சத்தீஷ்கார் சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய், மிசா அவசர காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர்களுக்கான 'சம்மான் நிதி(ஓய்வூதியத் திட்டம்) மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.


Next Story