ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு


ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு
x
தினத்தந்தி 28 April 2023 11:34 AM IST (Updated: 28 April 2023 12:22 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஜனாதிபதியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள 'கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை' திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.

புதுடெல்லி,

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றாக, சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய திட்டங்களாக பார்க்கப்படும் இவற்றுக்கு, ஜனாதிபதியை அழைத்து திறப்பு விழாவை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, டெல்லியில் ஜனாதிபதியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள 'கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை' திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.


Next Story