அயோத்தி ராமர் கோவிலில் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம்


அயோத்தி ராமர் கோவிலில் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 29 Jan 2024 6:50 PM IST (Updated: 29 Jan 2024 7:00 PM IST)
t-max-icont-min-icon

அயோத்தி ராமர் கோவிலில் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ராமர் கோவிலில் பால ராமர் சிலை கடந்த 22-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து 23-ந்தேதி முதல், காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் ராமர் கோவிலில் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார். அப்போது ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகளிடம் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.


Next Story