இந்து சாதுக்கள் பெயரில் குழந்தை கடத்தல் கும்பல்; மந்திரம் கூற தெரியாமல் சிக்கிய அவலம்
சத்தீஷ்காரில் இந்து சாதுக்கள் என்ற பெயரில் குழந்தை கடத்தல் கும்பல் ஒன்று மந்திரம் கூற தெரியாமல் போலீசாரிடம் சிக்கினர்.
பலோட்,
சத்தீஷ்காரில் பலோட் மாவட்டத்தில் குரூர் கிராமத்தில் தெருக்களில் சந்தேகத்திற்குரிய வகையில் 2 பேர் காவி உடையுடன் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகம் வரும் வகையில் அமைந்துள்ளன. இதுபற்றிய தகவல் கிடைத்து சென்ற போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
தொடக்கத்தில் அவர்கள் இந்து சாமியார்கள் என கூறியுள்ளனர். ஆனால், அதனை நம்ப முடியாத போலீசார், அவர்களிடம் காயத்ரி மந்திரம் மற்றும் மகாமிருத்யுஞ்சய மந்திரம் ஆகியவற்றை உச்சரிக்கும்படி போலீசார் கூறியுள்ளனர். இதனை கேட்ட அவர்கள் எதுவும் கூறாமல் இருந்துள்ளனர்.
இதன்பின்பு விரிவான விசாரணைக்கு பின்னர் இருவரும் இந்துக்களே இல்லை என தெரிய வந்தது. அவர்கள் குழந்தைகளை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளிவந்தது.
உத்தர பிரதேசத்தின் பிரதாப்கார் நகரில் நெவாடா கிராமத்தில் வசிப்பவர்களான அவர்களில் ஒருவர் முசாபிர் என்பவரின் மகன் என்பதும் ஜக்ரூ என்ற பெயரிலும், யாத் அலி என்ற மற்றொருவர், மாலே சஜ்ஜன் பெயரிலும் சுற்றி திரிந்தது தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டும், காவி உடைகள், தோளில் காவி பை அணிந்து, கைகளில் சில உபகரணங்களை வைத்து 3 பேர் சுற்றி திரிந்தபோது, அவர்களை தடுத்து வீடியோ எடுத்த நபர் போலீசிடம் செல்ல போகிறேன் என்றதும், நாங்கள் இந்துக்கள் இல்லை என அவர்கள் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினர். இந்த வீடியோ ஆன்லைனில் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியது.